Friday 27 September 2013

"மாதிரி"   Resembles

அவங்க மாதிரி, இவங்க மாதிரி, அது மாதிரி, இது மாதிரி அவங்க செய்யிறா மாதிரி , இவங்க செய்யிறா மாதிரி ன்னு எல்லாம் பேசறோமே , இந்த ஒப்பிடல் இல்லாம் ஒரு விஷயம் கூட இல்ல போலிருக்கு.

இதில முக்கியமா ஒரு விஷயம் :
இந்த ஒப்பிடலில் நல்ல விஷயம் இருந்துச்சுன்னா ஓகே. இல்லாட்டா அதனால் விளையும் மனச்சோர்வு, சலிப்பு இதெல்லாம் வாழ்நாள் தொடர் நரகம்.

சிலசமயங்களில் இந்த ஒப்பிடலில் தற்போது இல்லாதவரை குறிப்பிட்டு சொல்லப்படும் போது அவர் இது “போல (!) எதாவது ஒன்றில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே படும்.

பிறிதொரு சந்தர்ப்பங்களில் அந்த சமயத்தில் அந்த இடத்தில் இல்லாதவரை குறிப்பிட்டு அவர் போல / அது போல என்று குறிப்பிடப்படும்போது அவரின் “இருப்பு“ அங்கு  இருப்பது  உணரப்படும்!

உதாரணமாக..நான் போகாத ஒரு விழாவுக்கு என்  தோழி சென்றிருக்கும்போது அவள் கண்ணை யாரோ பொத்தி யாரு சொல்லு? எனக்கேட்க , “மாலாவா? அவள்தான் “இது போல செய்வாள் . .என கூறப்பட்ட பதில் பிடிக்காத கண் பொத்திய நபர், ஏன் நாங்க “அது மாதிரி செய்யமாட்டோமா? என்று சலுகையாக சண்டைக்கு வரலாம்! அந்த இடத்தில் இல்லாத மாலாவின் நினைவு / இருப்பு உணரப்படுகிறது இல்லையா?!

இன்னாரைப்போல ஜோரா எழுதுறார் என்றோ , அந்த ஆளா? ஹ்ம் அவனும் இவனைப்போல கடி ஆசாமிதான் என்றோ கூறக்கேட்டிருக்கலாம்.

இன்னும் கூட சிவாஜியின் நடிப்பு த்தாக்கம் இல்லாத நடிகர் இருக்க முடியாது
நவீன எழுத்தில் சுஜாதா போல எழுதாதவர் அரிது. அவர் “போல எழுத முயற்சியாவது செய்திருக்கக்கூடும்.
நமக்கு பிடித்தவர்களின் மேனரிசம் “போல நமக்கும் வருவது இயல்பே.

இது போல, இந்த மாதிரி, நிறைய சொல்லிகிட்டே போகலாம்.

நானும் உங்களைப் “போல எழுத  வந்திருக்கிறேன் !!!





நீங்க கல் எடுத்துண்டு வந்தாலும் கமென்ட் எடுத்துண்டு வந்தாலும் எனக்கு ரெண்டுமே ஓகே.. !

ஆனா நான் இப்போ ஜூட்டு !

Saturday 21 September 2013

இன்று உலக அமைதி தினமாம்.

இந்த அமைதி என்பது பின் டிராப் சைலேன்ஸ் (Pin drop silence)அல்ல!
சமாதானம் பிரதானம்!

ஆனா இப்போ சொல்லப்போற செய்திக்கும் இந்த படத்துக்கும் எதுவும்
சம்பந்தம் கிடையாது !


ஒரு பயில்வான் தெருவில் பெரிய பாறாங்கற்களை அனாயாசமாக தூக்கி வித்தை காண்பித்து பணம் சம்பாதித்துக்கொண்டிருந்தான் . ஒரு இரும்பு வியாபாரி இதை பார்த்து விட்டு பயில்வானிடம் "உனக்கு இதில் என்ன வருமானம் வரும்/" என்றார்
கூட்டம் வருவதை பொறுத்துங்க.
சிலநாள் 200கூட வரும். சிலநாள்  50ரூபா தான் வரும்.என்றான்.

 



சரி என் இரும்பு குடோனில் வேலைக்கு வரியா? தினமும் 100 ரூபாய் தருகிறேன்.குடோனில் இருக்கும் இரும்புகளை லாரியிலும் லாரியிலிருந்து வரும் இரும்புகளை குடோனிலும் எடுத்து வைக்க வேண்டும் . சம்மதமா? என்றார்.
தினமும் தெருவில் வித்தை காட்டுவதை விட இது நல்ல வேலையாக இருக்கிறதே என்று பயில்வான் ஒப்புக்கொண்டார்.
மறுநாளில் இருந்து இரும்பு வியாபாரியின் குடோனில் வேலை தொடங்கியது ஆனால் கொஞ்ச நாளிலேயே பயில்வான் மிகவும் சோர்ந்து போனார்.
வியாபாரி விசாரித்தார்.என்னப்பா இது..இதை விட பயங்கர எடையுள்ள பாறாங்கல்லை எல்லாம் அனாயாசாமா தூக்கிட்டு இப்போ இதுக்கு ரொம்ப தடுமாறுகிறாயே ? என்று.
பயில்வான் ..ஆமாங்க.உண்மைதான். அப்போ என்னைச்சுத்தி நிறைய மக்கள் இருப்பாங்க. உற்சாகமா கை தட்டுவாங்க . அந்த உற்சாகத்தில் எனக்கு கல்லின் கணம் தெரியாது.
இங்கே எல்லோரும் அவரவர் வேலையில் கவனமாக இருப்பதால் எனக்கு வேலையில் கவனம் செல்லவில்லை என்றார்.

இப்படி வித்தை காட்டும் கலைஞர்களுக்கு கைதட்டுவது தான் மிகப்பெரிய உற்சாகத்தை கொடுக்கும் என்பது தெரிந்த விஷயம் தான் .

ஆனால் கைதட்டும் போது கை தட்டுபவர்களுக்கு நோய் தீரும்   என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக மாரடைப்பு மற்றும் கேன்சர் .

எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் திபெத் .சென்றிருந்த போது தலாய் லாமாவை சந்திக்க நேர்ந்தது . தனக்கு இப்படி ஒரு நோய் இருப்பதை தலாய் லாமாடம் கூறினார்.
அதற்கு தலாய் லாமா "நீ தினமும் உன் கைகளை ஒரு 20 நிமிடம் தட்டு. பிறகு கவனித்து பார் உனது மாற்றங்களை என்றார்.
நம்ம கைதானே...தட்டுவோம் ன்னு அவரும் தினமும் 30நிமிடங்கள் தட்டினார்.
என்ன ஆச்சரியம்...இந்த தினசரி பழக்கத்தில் அவரது நோய் முற்றிலும் நீங்கியதாக தெரிவித்தபோது டாக்டர்களே நம்பவில்லை!
எப்படி குணமாயிற்று?

நமது உடலிலுள்ள இரத்த நாளங்கள் 2(mm) மில்லிமீட்டர் குறுக்களவு கொண்டவை . இதனால் டென்ஷன் ஆகும்போது அட்ரினலின் கார்டிசால் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும். இது இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதைத்தான் கைதட்டல் சீர் செய்கிறது ! 

வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும் என்பது போல தினமும் கைத்தட்டல் அக்குபிரஷர் சிகிச்சை போல செயல் படுகிறது.
ஒருவரை நோக்கி கைதட்டும்போது அந்த நபர் திரும்பி பார்ப்பது போல
ஆரோக்கியமும் நம்மை திரும்பி பார்க்கும் .

எங்கே ஜோரா கை தட்டுங்க பாக்கலாம்..?
ம்ம்ம்ம்..அப்டித்தான் !!


எல்லோருக்கும் வந்தனம் ! குட் நைட் :)






ஐங்கரனை தொழுது 
அச்சமின்றி 
எழுத வந்திருக்கேன்!



எண்ணங்களை வெல்வதும் எண்ணங்களே !

அவ்வப்போது எனது சில எண்ணங்களுடன் 
இங்கு வருவேன் 
உங்களுடன் பகிர பழக !

இது எனது முதல் முயற்சி.

இதற்கு பொறுமையுடன் உதவிய
திரு.சதீஷ்குமார் பிரணதார்த்தி அவர்களுக்கு
எனது முதல் நன்றி..

படித்து சகித்து ஆதரவு நல்கும் 
உங்களின் இனிய உள்ளங்களுக்கு 
எனது தொடரும் நன்றி  !