Saturday 21 September 2013

இன்று உலக அமைதி தினமாம்.

இந்த அமைதி என்பது பின் டிராப் சைலேன்ஸ் (Pin drop silence)அல்ல!
சமாதானம் பிரதானம்!

ஆனா இப்போ சொல்லப்போற செய்திக்கும் இந்த படத்துக்கும் எதுவும்
சம்பந்தம் கிடையாது !


ஒரு பயில்வான் தெருவில் பெரிய பாறாங்கற்களை அனாயாசமாக தூக்கி வித்தை காண்பித்து பணம் சம்பாதித்துக்கொண்டிருந்தான் . ஒரு இரும்பு வியாபாரி இதை பார்த்து விட்டு பயில்வானிடம் "உனக்கு இதில் என்ன வருமானம் வரும்/" என்றார்
கூட்டம் வருவதை பொறுத்துங்க.
சிலநாள் 200கூட வரும். சிலநாள்  50ரூபா தான் வரும்.என்றான்.

 



சரி என் இரும்பு குடோனில் வேலைக்கு வரியா? தினமும் 100 ரூபாய் தருகிறேன்.குடோனில் இருக்கும் இரும்புகளை லாரியிலும் லாரியிலிருந்து வரும் இரும்புகளை குடோனிலும் எடுத்து வைக்க வேண்டும் . சம்மதமா? என்றார்.
தினமும் தெருவில் வித்தை காட்டுவதை விட இது நல்ல வேலையாக இருக்கிறதே என்று பயில்வான் ஒப்புக்கொண்டார்.
மறுநாளில் இருந்து இரும்பு வியாபாரியின் குடோனில் வேலை தொடங்கியது ஆனால் கொஞ்ச நாளிலேயே பயில்வான் மிகவும் சோர்ந்து போனார்.
வியாபாரி விசாரித்தார்.என்னப்பா இது..இதை விட பயங்கர எடையுள்ள பாறாங்கல்லை எல்லாம் அனாயாசாமா தூக்கிட்டு இப்போ இதுக்கு ரொம்ப தடுமாறுகிறாயே ? என்று.
பயில்வான் ..ஆமாங்க.உண்மைதான். அப்போ என்னைச்சுத்தி நிறைய மக்கள் இருப்பாங்க. உற்சாகமா கை தட்டுவாங்க . அந்த உற்சாகத்தில் எனக்கு கல்லின் கணம் தெரியாது.
இங்கே எல்லோரும் அவரவர் வேலையில் கவனமாக இருப்பதால் எனக்கு வேலையில் கவனம் செல்லவில்லை என்றார்.

இப்படி வித்தை காட்டும் கலைஞர்களுக்கு கைதட்டுவது தான் மிகப்பெரிய உற்சாகத்தை கொடுக்கும் என்பது தெரிந்த விஷயம் தான் .

ஆனால் கைதட்டும் போது கை தட்டுபவர்களுக்கு நோய் தீரும்   என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக மாரடைப்பு மற்றும் கேன்சர் .

எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் திபெத் .சென்றிருந்த போது தலாய் லாமாவை சந்திக்க நேர்ந்தது . தனக்கு இப்படி ஒரு நோய் இருப்பதை தலாய் லாமாடம் கூறினார்.
அதற்கு தலாய் லாமா "நீ தினமும் உன் கைகளை ஒரு 20 நிமிடம் தட்டு. பிறகு கவனித்து பார் உனது மாற்றங்களை என்றார்.
நம்ம கைதானே...தட்டுவோம் ன்னு அவரும் தினமும் 30நிமிடங்கள் தட்டினார்.
என்ன ஆச்சரியம்...இந்த தினசரி பழக்கத்தில் அவரது நோய் முற்றிலும் நீங்கியதாக தெரிவித்தபோது டாக்டர்களே நம்பவில்லை!
எப்படி குணமாயிற்று?

நமது உடலிலுள்ள இரத்த நாளங்கள் 2(mm) மில்லிமீட்டர் குறுக்களவு கொண்டவை . இதனால் டென்ஷன் ஆகும்போது அட்ரினலின் கார்டிசால் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும். இது இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதைத்தான் கைதட்டல் சீர் செய்கிறது ! 

வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும் என்பது போல தினமும் கைத்தட்டல் அக்குபிரஷர் சிகிச்சை போல செயல் படுகிறது.
ஒருவரை நோக்கி கைதட்டும்போது அந்த நபர் திரும்பி பார்ப்பது போல
ஆரோக்கியமும் நம்மை திரும்பி பார்க்கும் .

எங்கே ஜோரா கை தட்டுங்க பாக்கலாம்..?
ம்ம்ம்ம்..அப்டித்தான் !!


எல்லோருக்கும் வந்தனம் ! குட் நைட் :)






16 comments:

  1. இதோ.. என் கைத்தட்டல் முதலாவதாக இருக்கட்டும். நல்லதொரு பதிவு. வாழ்க வளர்க.

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி .. பெருமிதத்தில வார்த்தைகளே வரவில்லை... :)
      FEEL SO HAPPY !

      Delete
  2. அருமையா இருக்கு வாழ்த்துகள் !

    ReplyDelete
  3. ஜோரா பல கைதட்டல்கள் போட்டுட்டேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாழ்க வளர்க :)

    ReplyDelete
  5. ஒரு மேடையில் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் உரையாற்றிக் கொண்டிருந்தார்... அவர் பேசி முடிச்சதும் வழக்கம் போல எல்லோரும் கை தட்டினாங்க. ஆனா அதில் அவருக்கு திருப்தி இல்ல. இறங்கி வந்ததும் தன்னோட நண்பர் கிட்ட, என் பேச்சு எப்படி இருந்தது என்று கேட்டார்... அதற்கு அவரும், ரொம்ப அற்புதமான பேச்சுங்க உங்களோடது, நிறைய கருத்துகளை நான் குறிப்பெடுத்து வச்சிருக்கேன்.. அப்படின்னு சொன்னார். அப்பாடான்னு நிம்மதியானார் அக்கல்லூரி பேராசிரியர்..

    நிகழ்வு 2:

    பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த குழந்தை விளையாடிகிட்டு இருந்துச்சு... குழந்தையோட அம்மா, பள்ளிக் கூடம் சேர்த்து மூணு மாசம் ஆயிடுச்சே என்ன சொல்லிக் கொடுத்திருப்பாங்கன்னு ஆசைப்பட்டு தன குழந்தையைக் கூப்பிட்டு தங்கம் ஒன்னு, ரெண்டு தெரியுமான்னு கேட்டாங்க, குழந்தை தெரியும்ன்னு சொல்லுச்சு... சொல்லுன்னு சொன்னதும், குழந்தை ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு... அத்தோட நிறுத்திகிச்சு. அம்மா மறுபடியும் சொல்ல சொன்னாங்க... அப்பாவும் அதே மாதிரி நாலு வரைக்கும் சொல்லி நிறுத்திகிச்சு. அம்மாக்கு கோபம், என்னடா குழந்தைக்கு ஒன்னு ரெண்டு கூட சொல்லத் தெரியலைன்னு நினைச்சு கிட்டு, அடுத்த நாள் பள்ளிக் கூடத்துக்குப் போனாங்க.. அங்க ஆசிரியர் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துட்டு இருந்தார். அவர் கிட்ட என்னங்க என் குழந்தை ஒன்னு, ரெண்டு கூட சொல்ல மாட்டேங்குது.. நீங்க சொல்லிக் கொடுக்களையான்னு கேட்டாங்க.. அதுக்கு அவர் சொன்னார் இல்லையே உங்க குழந்தை அழகா சொல்லுமே.. அப்படின்னு சொல்லிட்டு குழந்தைய கூப்பிட்டார்...

    குழந்தை கிட்ட சொல்ல சொன்னார்... குழந்தை ஒன்னு சொல்லுச்சு, அப்போ ஆசிரியர் ம்ம்.. அப்படினார். குழந்தை ரெண்டு சொல்லுச்சு, ஆசிரியர் ம்ம் அப்படின்னார். குழந்தை மூணு சொல்லுச்சு, ஆசிரியர் ம்ம்.. அப்படின்னார்.. குழந்தை அப்படியே நூறு வரை சொல்லிடுச்சு... அப்போ அவங்க அம்மா சொன்னாங்க நான் நேத்து கேட்ட போது சொல்லலையே இப்போ மட்டும் எப்படி சொல்லுச்சு அப்படின்னு... அதுக்கு ஆசிரியர் சொன்னார், குழந்தை புதுசா கத்து கிட்டு வந்த விஷயத்தை நீங்க அங்கீகரிக்கனும்... ஒன்னு அப்படின்னு சொல்லி முடிச்சதும் நீங்க ம்ம்.. அப்படின்னு ஒரு சின்ன அங்கீகாரத்தை கொடுத்திருக்கணும்... இயந்திரம் தான் தொடர்ச்சியா சொல்லிகிட்டே இருக்கும். மனிதர்களுக்கு தேவை அங்கீகாரம் மட்டுமே. அதுவும் குழந்தைகளுக்கு ரொம்பவும் முக்கியம், அப்படின்னு அம்மா செய்த தவறை சுட்டிக் காட்டினார்.

    ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கே தன் பேச்சுக்கான அங்கீகாரம் தேவைப் படுகிற போது, குழந்தைகளுக்கு, அவர்களின் சிறு சிறு முயற்சிகளுக்கு நாம் அங்கீகாரம் அளிக்கிறோமா என்பது மிக முக்கியமானது... எனவே கற்றுக் கொள்ள வேண்டியது நாம் தான், ஏனெனில், நாமும் அதே அங்கீகாரத்திற்கு தான் காத்திருக்கிறோம்..

    ReplyDelete
    Replies
    1. வாஹ்...Gopal Krishnan such a great noding !
      அங்கீகாரத்துக்குத்தானே இவ்ளோ கா(க)ரணமும் !!! (y)
      Thank You very much :)

      Delete
  6. Wow! Welcome to the blog world.entry with great post.congrats and my claps too. :-)

    ReplyDelete
  7. mals super padhivu... kaithattal ku pinnaadi ivlo sedhi irukkaa... idhukkaaga pudinga yen kaithattalgal pala...

    ReplyDelete
  8. என் கை தட்டல்கள் மாலா..

    ReplyDelete
  9. அருமை... படித்தால் முதல் பதிவு போல தோணலை. As the proverb goes "Mere absence of war is not peace" - Peace is an inner feeling which should be expressed through soft, loving words followed up by kind acts. Congrats Isha Mala

    ReplyDelete
  10. அருமையான முயற்சி. வாழ்த்துக்கள். தொடரட்டும் இந்த பணி.

    ReplyDelete
  11. யார் இது மாலா ? அனன்யா 2010 லே எழுதிய பதிவுக்கு 2013 லே பின்னூட்டம் போட்டு இருக்காங்க.....

    இன்னாம்மா, இப்ப தான் முழிச்சுண்டேளா கேட்கணும் அப்படின்னு உங்க பதிவுக்கு வந்தா...

    சும்மா சொல்லக்கூடாது

    அசந்தே போயிட்டேன்.

    ஆல் த பெஸ்ட்.

    காட் பிளேஸ் யூ.
    டயம் இருந்தா எங்காத்துக்கு வந்து ஒரு காபி குடிச்சுட்டு போங்க.
    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  12. மன்னிக்கணும் ! நிறைய எழுதி இருகிறீர்கள் . நான் படிக்காமல் சென்ற பதிவுக்கு விமர்சனம் எழுதினேன் ...மிக அற்புதமான் பதிவுகள் ! தொடருங்கள்

    ReplyDelete