Friday 27 September 2013

"மாதிரி"   Resembles

அவங்க மாதிரி, இவங்க மாதிரி, அது மாதிரி, இது மாதிரி அவங்க செய்யிறா மாதிரி , இவங்க செய்யிறா மாதிரி ன்னு எல்லாம் பேசறோமே , இந்த ஒப்பிடல் இல்லாம் ஒரு விஷயம் கூட இல்ல போலிருக்கு.

இதில முக்கியமா ஒரு விஷயம் :
இந்த ஒப்பிடலில் நல்ல விஷயம் இருந்துச்சுன்னா ஓகே. இல்லாட்டா அதனால் விளையும் மனச்சோர்வு, சலிப்பு இதெல்லாம் வாழ்நாள் தொடர் நரகம்.

சிலசமயங்களில் இந்த ஒப்பிடலில் தற்போது இல்லாதவரை குறிப்பிட்டு சொல்லப்படும் போது அவர் இது “போல (!) எதாவது ஒன்றில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே படும்.

பிறிதொரு சந்தர்ப்பங்களில் அந்த சமயத்தில் அந்த இடத்தில் இல்லாதவரை குறிப்பிட்டு அவர் போல / அது போல என்று குறிப்பிடப்படும்போது அவரின் “இருப்பு“ அங்கு  இருப்பது  உணரப்படும்!

உதாரணமாக..நான் போகாத ஒரு விழாவுக்கு என்  தோழி சென்றிருக்கும்போது அவள் கண்ணை யாரோ பொத்தி யாரு சொல்லு? எனக்கேட்க , “மாலாவா? அவள்தான் “இது போல செய்வாள் . .என கூறப்பட்ட பதில் பிடிக்காத கண் பொத்திய நபர், ஏன் நாங்க “அது மாதிரி செய்யமாட்டோமா? என்று சலுகையாக சண்டைக்கு வரலாம்! அந்த இடத்தில் இல்லாத மாலாவின் நினைவு / இருப்பு உணரப்படுகிறது இல்லையா?!

இன்னாரைப்போல ஜோரா எழுதுறார் என்றோ , அந்த ஆளா? ஹ்ம் அவனும் இவனைப்போல கடி ஆசாமிதான் என்றோ கூறக்கேட்டிருக்கலாம்.

இன்னும் கூட சிவாஜியின் நடிப்பு த்தாக்கம் இல்லாத நடிகர் இருக்க முடியாது
நவீன எழுத்தில் சுஜாதா போல எழுதாதவர் அரிது. அவர் “போல எழுத முயற்சியாவது செய்திருக்கக்கூடும்.
நமக்கு பிடித்தவர்களின் மேனரிசம் “போல நமக்கும் வருவது இயல்பே.

இது போல, இந்த மாதிரி, நிறைய சொல்லிகிட்டே போகலாம்.

நானும் உங்களைப் “போல எழுத  வந்திருக்கிறேன் !!!





நீங்க கல் எடுத்துண்டு வந்தாலும் கமென்ட் எடுத்துண்டு வந்தாலும் எனக்கு ரெண்டுமே ஓகே.. !

ஆனா நான் இப்போ ஜூட்டு !

13 comments:

  1. Replies
    1. நன்றி எண்ணம் பாலா :)

      Delete
  2. மாலாவின் எண்ணங்களை படித்ததில்லை ! பரவாயில்லையே நல்லா எழுதி இருக்கீங்க ! யாரும் தொடாத சப்ஜெக்ட் தொடுகிறீர்கள் ! உளவியல் சார்ந்து எழுதுவதற்கு உங்களால் முடியும் என நம்புகிறேன் ! எழுதுங்கள் எழுதுங்கள் ....மக்களுக்காக எழுதுங்கள்

    ReplyDelete
  3. அது மாதிரி இது மாதிரி இல்லாம தனி மாதிரியா எழுனது நல்லா இருக்கு.
    இது மாதிரி நெறயா எழுதுங்க

    ReplyDelete
    Replies
    1. தண்டு சார்...ரொம்ப நன்றி :)

      Delete
  4. Replies
    1. வரட்டும் வரட்டும்..Retransmit பண்ணிடறேன் :

      Delete
  5. என்னை சுஜாதா போல எழுதுவதாக யாராவது சொல்லும் போது கொஞ்சம் லஜ்ஜையாக இருக்கும். அது பரவாயில்லை, சப்ளையர் ஒருவர் என் ஃபோட்டோவைப் பார்த்து விட்டு ‘விஜய் மாரி கீறீங்க சார்’ என்று சொன்ன போது எப்படி ரியாக்ட் பண்ணுவது என்றே தெரியவில்லை.....

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
    Replies
    1. ஜவஹர் சார்..உங்க அனாயாசமான நகைச்சுவை எழுத்துக்கு நான் பரம விசிறி...:)
      உங்க கமென்ட் க்கு மிக்க நன்றி !

      Delete
  6. திரு. சுஜாதா அவர்கள் சொன்ன மாதிரி, "உலகில் எல்லாரும் ஒரு 15 நிமிடம் உலகப் புகழ் பெறுவார்கள்" ங்கிற மாதிரி இல்லாம நிறைய நேரம் (சுமாரா 16 நிமிஷம் போதுமா..?) புகழுடனிருக்க வாழ்த்துகள்..! (இந்த "வாழ்த்துகள்"-ளுக்கு "க்" வரக் கூடாதுன்னு கலைஞர் சொன்னதப் படிச்சதுல இருந்து "க்" போடுறதே இல்ல..!)

    ReplyDelete
  7. அருமையான பதிவு.
    நாம், நாமாக இருக்க வேண்டும்.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete