Monday 7 October 2013

பழமொழியும் பார்க்கர் பேனாவும் !

வந்தனம்.
இந்த எண்ணம் சிவ நாராயணன் என்பவரின் ஒரு பதிவில் தோன்றியது
பாட்டி காலத்து பழமொழிகள் எல்லாம் இன்னும் உயிரோட்டமாய் அர்த்தம் நிரம்பியதாகத்தான் இருக்கு .

பழமொழிக்கு முன்னாலே ஒரு சம்பவம் சொல்லிடறேன்..
அப்புறம் இந்த பழமொழி அதோட மேட்ச் ஆகுதான்னு பாக்கலாம்.

ஒரு விழாக்கால மதியம். எல்லாரும் சாப்டுட்டு உண்ட மயக்கத்துல ஆளுக்கு ஒரு வசதியான ஓரம் பாத்து படுத்தாச்சு. பக்கத்து வீட்டு வாண்டு ஒண்ணு மட்டும் துருதுருன்னு அங்கியும் இங்கியும் எல்லோரையும் தன்னோட பிஞ்சு காலால மிதிச்சு ஓடிண்டு இருக்கு.
அப்பா – ஏம்மா இங்க வச்சிருந்த என்னோட பார்க்கர் பேனா எங்கே?
நான் – தெரிலியேப்பா. அங்க உன் டேபிள் மேலதான் இருந்துதே..?

நடுவில் அந்த வாண்டு குடுகுடுன்னு ஓடிவந்து "யே...தாத்தாவோட பேனாவ ராமு மாமா எதுத்திந்து போயித்தார்" ன்னு மிழற்றியது .



அப்பா – என்னம்மா இது? எந்த ராமு?
நான் - ஹ்ம்ம் (நான் என்னத்த கண்டேன் ?) எனக்கும் ன்னு இழுக்கறதுக்குள்ள,

வாண்டை  தேடி வந்த அதோட அம்மா , இங்கியாடா இருக்கே..? உன்ன ஊரெல்லாம் தேடறேன்... வா இங்க சொல்றேன் ன்னு முகுது ல  பட் னு ஒரு சாத்து சாத்தி (எனக்கே வலிச்சுச்சு) தூக்கிட்டு போக..குழந்தை போகிற போக்கிலே சும்மா இருக்காம, அம்மா, அந்த ராமு மாமா தாத்தாவோத (ட) பேனாவ திதிந்து (திருடிக்கொண்டு) போயித்தா என்றது !

அந்த அம்மாவிட..அப்பா”, ங்க யாருங்க அந்த ராமு மாமா என்றார்?
அந்தம்மா கூலா..நீங்க வேற..குழந்தை யாரை பாத்தாலும் ராமு மாமான்னு தான் சொல்லும் என்றபடி போய்கொண்டே இருந்தாங்க.

கிழிஞ்சுது போ. .என்று அப்பா என்னை பார்த்து முறைக்க, நான் எதுவும் செய்ய இயலாத ஒரு பார்வையுடன் அந்த பார்வையை எதிர்நோக்க ...

குழந்தையிடம் அம்மா..ஏண்டா இப்படி ஒரு ஒட்டைவாயா இருக்க? எல்லாம் என் போறாத காலம் ன்னு சொல்லி முடிக்கலை; குழந்தை பட்டுன்னு எட்டூருக்கு கேட்கிற மாதிரி எல்லா வாயும் ஓட்ட வாய்தாம்மா ன்னு கிளுகிளுன்னு சிரிச்சுது...

இப்ப பழமொழி :

ஆச்சானுக்கு பேச்சான்
மதனிக்கு ஒடம்பொறந்தான்
நெல்லு குத்துறவனுக்கு
நேர ஒடம்பொறந்தான்!!!



இதில உறவுமுறை ஏதும் புரியறதோ ?
சம்பந்தா சம்பந்தம் இல்லாம சம்மன் ஆகிறவங்களையும் இப்படி சொல்லலாம்.
குழப்புற உறவு முறையும் இப்படி கிண்டல் அடிக்கலாம் .

அது சரி..பேனா என்னாச்சு? அது போனது போனதுதான்...
நீங்க யாராச்சும் ‘அந்த மேற்படி  உறவுமுறைல பாத்தா,  நாங்க கேட்டதா சொல்லுங்க  :p

  
எண்ணங்கள் தொடரும் :)


11 comments:

  1. தாயீ...இஷா...ஒண்ணும் புரியல....

    ReplyDelete
    Replies
    1. இப்ப புரிஞ்சிருக்குமே !

      Delete
  2. நான் கூட எனக்கு மட்டுந்தான்
    புரியலன்னு நெனச்சு
    பயந்தே போய்ட்டேன்!
    அப்பா...

    ReplyDelete
  3. நல்ல வேல நீங்களே குழப்பற மாதிரின்னு சொல்லிட்டீங்க.
    அப்பாவோட பேனா காணம் அதுவரைக்கும் பிருஞ்சது.

    ReplyDelete
    Replies
    1. அவ்ளோ புரிஞ்சா போதும் !!

      Delete
  4. புரியாதவர்கள் குழுவில் நானும் ஐக்கியம்....

    ReplyDelete
  5. "கும்பி" காஞ்சா குதிரையும் வைக்கோல் தின்னும்!
    மேச்சா மதனிய மேய்ப்பேன், மேய்க்காட்டி பரதேசம் போவேன்!

    ReplyDelete
  6. பல்லுகுத்தினவன் பக்கத்துல வந்தான். சொல்லு போச்சுன்னு சொல்லிட்டுத் தள்ளிப் போயிட்டான்! :))

    ReplyDelete