Monday 11 November 2013

கா'ரண'(காரிய)ம்





காரணமில்லாமல் காரியமில்லை என்பது
நம(என)க்கு லேட்டாத்தான் புரிய வருகிறது. 

நாங்கள் டீ சாப்பிடும்போது அதற்கும் பால் ஊற்றியாக வேண்டும். கொஞ்ச நேரம் கழித்து ஊற்றினால்..அவ்ளோதான். அது அப்படியேதான் இருக்கும். திரும்பிக்கூட பார்க்காது.
தெருமுனையில் வரும் போதே என் வண்டியின் சத்தம் அதற்கு மிகப்பரிச்சயம்! வாலாட்டிக்கொண்டு வந்துவிடும் வாசலுக்கு வரவேற்க.
சிலசமயம் நான் வரும் நேரம் அது இல்லாமலிருந்து அப்புறம் ஓடிவந்து என்னை தேடி பாத்ரூம் வாசலில் காத்திருக்கும் !
நாங்கள் யாரேனும் ஒருவர் ஊரில் இல்லாத நாட்களில் சாப்பிடாமல் இருக்கும்.
சுத்தம் முக்கியம். அழுக்கு நீர் குடிக்காது. பழைய சாதம் பிடிக்காது. துளி தூசு இருக்கிற இடத்தில் கூட படுக்காது. பேரீச்சம்பழம் விரும்பிச்சாப்பிடும். அணில் ஆகாது. குருவிகளுடன் அதற்கு இருந்த நட்பு மிகவும் ஆச்சரியம். தனது தட்டிலிருந்து குருவிகள் கொத்தி தின்றால் மௌனமாக புன்சிரிப்புடன் பார்த்து கொண்டிருக்கும்.. ஆனால்  அணில் வந்தாலோ காக்கை வந்தாலோ ஆக்ரோஷமாய் துரத்தும்.
அது நமது தொடுகையை விட குரலைத்தான் ரொம்ப கவனிக்கும். குச்சியை வைத்து ஆக்ரோஷமாக முகத்தை  வைத்துகொண்டு அடித்தால் கூட அது கோபப்படாது. ஆனால் அதே சமயம் அடிக்காமலே குரலை மட்டும் உயர்த்தி அடிப்பது போல கையை ஓங்கி பாருங்க..பாய்ந்து குதறிவிடும் குதறி.
Dogs Psychology !
நாம் கோபமாக இருக்கிறோமா வருத்தமாக இருக்கிறோமா சந்தோஷமாக இருக்கிறோமா என்பதை நம்மிடம் இருந்து பரவும் அலைகளில் இருந்தே அது உணருமாம்!
நாம் யாரிடம் என்ன மாதிரி நடந்துக்கிறோம்ன்னு கூர்ந்து கவனிக்கும்.
அடுத்த முறை அதுவே ஆட்டோமாடிக்காக குலைப்பதோ வாலாட்டுவதோ ட்யூன் பண்ணிக்கும்!
நான் தியானத்திற்கு உட்காரும் நேரம் அதுவும் சத்தம் போடாமல் தூரத்தில் என்னை பார்த்தவாறே படுத்திருக்கும் . அந்த நேரத்தில் யாரேனும் வந்தால் கூட குலைக்காது.
ஆட்கள் வந்தால் ஒருமாதிரி; நாயோ மாடோ வந்தால் ஒருமாதிரி ன்னு விதவிதமாய் வாய்ஸ் மாடுலேஷன் வச்சிருக்கும்.
என்ன ரோஷம் ? என்ன அமெரிக்கை ! என்ன வாத்சல்யம்! அப்படி பழகும் விதவிதமாய். சந்தோஷசமயங்களில் தலைதெறிக்க மூணு நாலு முறை கிரௌண்டை சுத்தி சுத்தி ஓடி என்னை பிடி என்னை பிடி ன்னு கிட்ட வந்து சவால் விடும்..
பிடிக்க குனிவதற்குள் பளிச்னு வளைஞ்சு ஓடிடும் ... !

பதினொரு வருஷ சகவாசம் !

இப்போ இல்லை இதெல்லாம்...ஒரு ரெண்டு வாரம் ரொம்ப கஷ்டப்பட்டது . மருந்து மாத்திரை, ஊசி, ஹூஹூம்..எதுக்கும் சரியாகலை. வயதும் ஒரு காரணமாய்  இருக்கலாம் நோய் தாக்கு பிடிக்க முடியாமல் போனதற்கு.
எந்த வேலை செய்தாலும் அதன் நினைவு ஊடே மின்னுகிறது .........

போகட்டும்..ரொம்ப கஷ்டப்படாமல் போனதும் ஒரு விதத்தில் பரவாயில்லைன்னு தான் இருக்கு. இருந்தாலும்..... ஹ்ம்ம்....

மீண்டும் முதல் வரி !

8 comments:

  1. மனத்தைக் கஷ்டப் படுத்துகிறது. நானும் ஒரு நாய் நேசன். 'எங்கள்' பிளாக்கில் இதே போன்ற அனுபவங்களை எழுதி உள்ளேன். மனரணம் சீக்கிரம் ஆறட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  2. "போகட்டும்..ரொம்ப கஷ்டப்படாமல் போனதும்
    ஒரு விதத்தில் பரவாயில்லைன்னு
    தான் இருக்கு.! "

    #### இந்த வார்த்தைகள் போலத்தான்
    என் இறப்பும் இருக்கவேண்டும் !
    என நினைப்பேன் ..

    ReplyDelete
  3. கர்மவினையை பொறுத்து :)

    ReplyDelete
  4. மூன்று நாட்களுக்கு முன்தான் நானும் உங்களை மாதிரி தொலைத்துவிட்டு தவிக்கிரேன்! இந்த நேரத்தில் தற்செயலாக கண்ட உங்கள் பதிவு ஆச்சரியமாகவும் ஆறுதலாகவும் இருந்தது! நன்றி! நீங்கள் எழுதிய ஒவ்வொரு வரியும் பிசகுமாராமல் எங்கள் நாய்க்கும் பொருந்தும்! போட்டோ உட்பட!! 8 வருடம் கூடவேயிறுந்து நோய்வாய்பட்டு என் தாயார் மடியிலே உயிரைவிட்டது! பாலை இங்க் பில்லர் மூலம் குடித்துக்கொண்டே!! என் தந்தை இறந்தபோது அழுததற்க்கு நிகராக அழுதார் என் தாயார்! சில மணாநேரம் அழுதுவிட்டு தேற்றிக்கொண்டார்! ஆனால் என்னால்தான் இன்னும் மீலமுடியவில்லை. அண்ணன், அம்மா, அக்கா என்று உறவு வைத்தே அதனிடம் பழகினோம்! ஆனால் எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்தபின் அதனிடம் காட்டிய அண்பு குரைந்தது! ஒரு கட்டத்தில் அதை கண்டுகொள்ளாமலே இருந்துவிட்டேன்! ஆனாலும் என்னை சுற்றியே வந்து மாசில்லாத தன் பாசத்தை காட்டியது! தியாகச் சுடர்! இப்போது குற்ற உணர்வில் தவிக்கிறேன்! என் குழந்தையிடம் பாசம் காட்ட முடியாமல்கூட அதன் நினைவு வாட்டுகிறது!

    ReplyDelete